தல அஜித்தின் பைக் ட்ரிப்… வித்தியாசமான பைக் குறித்து அலசும் அவரது ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் தல அஜித்துக்கு அளவில்லாத ரசிகர்கள் கூட்டம் இருப்பது தெரிந்ததே. எந்த அளவிற்கு என்றால் எங்கோ ஒரு மூலையில் அஜித் பற்றிய பேச்சு அடிப்பட்டால் கூட அஜித் ரசிகர்கள் அதை வைரலாக்கி விடுவர். அந்த அளவிற்கு நடிகர் அஜித் மீது தீவிரப்பற்றுக் கொண்ட அவரது ரசிகர்கள் கடந்த சில தினங்களாக நடிகர் அஜித் போன பைக் டிரிப் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வைராக்கி வருகின்றனர்.
தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் “வலிமை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நீண்ட எதிர்ப்பார்ப்புக்கு பிறகு வெளியாகி இருக்கிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கடும் சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வலிமை படத்தின் உருவாக்கத்திற்கு இடையே தல அஜித் பைக் டிரிப் சென்ற புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.
சிக்கிம் அருகே தல அஜித் பைக் டிரிப் சென்றதாகக் கூறப்படும் இந்த புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டதா அல்லது முன்பே எடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆனால் அந்தப் புகைப்படங்களில் அஜித் ஓட்டிச் செல்லும் BMW R 1200GS அட்வென்சர் பைக் குறித்த ஆர்வம் தற்போது ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டது. இதனால் அந்த பைக்கை குறித்த அம்சங்களை தற்போது ரசிகர்கள் இணையத்தில் அலசி வருகின்றனர்.
இந்நிலையில் தல அஜித் ஓட்டிச்சென்ற BMW பைக் குறித்தும் அதன் சிறப்பம்சம் குறித்தும் ரசிகர்களின் ஆர்வத்திற்காக தொகுக்கப்பட்டு உள்ளது. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments