மோசடி குற்றவாளியை கண்டுபிடிப்போம்: அஜித் வெளியிட்ட அதிரடி அறிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் அஜித், மீண்டும் சமூக வலைத்தளங்களில் இணையவிருப்பதாக அவருடைய போலியான கையெழுத்துடன் ஒரு பதிவு இணையதளத்தை பரபரப்பாக்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இதுகுறித்து அஜித் சட்டரீதியாக சட்ட ஆலோசர்கள் மூலம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவரது வழக்கறிஞர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடிகர் அஜித் குமார் அவர்களின் சட்ட ஆலோசகர்களாகிய நாங்கள் (இனிமேல் அவர் எங்கள் கட்சிக்காரராக கருதப்படுகிறார்). மேலும் இந்த நோட்டீஸை அவரது அறிவுறுத்தலின் பேரிலும் மற்றும் அவரது சார்பாகவும் நாங்கள் வெளியிடுகிறோம்.
மார்ச் 6, 2020 தேதியில் அஜித்குமார் வெளியிட்டதாக கடிதம் ஓன்று சமூக ஊடகங்களில் பரவி வருவது அவரது கவனத்திற்கு வந்துள்ளது. அதில் சமூக ஊடகங்களில் மீண்டும் சேர முடிவு செய்துள்ளதாகவும், அதிகாரப்பூர்வ கணக்கு வைத்த இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது போல் உள்ளது. அந்தக் கடிதம் அஜித்குமார் அவர்களின் பெயருடன் ஒரு போலியான தலைப்பில் அச்சிடப்பட்டு மேலும் அவரது போலி கையொப்பத்தையும் இணைத்திருப்பதைப் பார்க்கும் போது அதிர்ச்சியளிக்கிறது.
அந்த கடிதம் அஜித்குமார் அவர்களால் வெளியிடப்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்த கருத்துக்கள் யாவும் மறுக்கப்படுகின்றன என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கஅவர் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறார். அஜித்குமார் கடந்த காலத்தில் ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதில் தனக்கு எந்தவொரு சமூக ஊடகக் கணக்குகளும் இல்லை என்றும், சமூக ஊடகங்களின் எந்தவொரு அதிகாரப்பூர்வ பக்கத்தையும் கொண்டிருக்கவில்லை அல்லது ஆதரிக்கவில்லை என்றும் பலமுறை தெரிவித்துள்ளார்.
அஜித்குமார் கீழ்கண்டவற்றை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறார்.
௮) அவருக்கு அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் எதுவும் இல்லை.
ஆ) அவர் எந்த சமூக ஊடகங்களிலும் இணைய விரும்பவில்லை.
இ) சமூக ஊடகங்களின் எந்தவொரு கருத்தையும் மற்றும் எந்தவொரு ரசிகர் பக்கத்தையும் குழுவையும் அவர் ஆதரிக்கவில்லை
ஈ) மீண்டும் சமூக ஊடகங்களில் சேரப்போவதாகக் கூறி வந்த இந்த போலி கடிதத்தை அவர் வெளியிடவில்லை.
இறுதியாக, தவறான அறிவிப்பை வெளியிட்ட மற்றும் எங்கள் கட்க்காரரின் கையொப்பத்தை மோசடி செய்த குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்குத் தேவையான மற்றும் பொருத்தமான சட்ட நடவடிக்கைகள் முடிந்தவரை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட விரும்புகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments