விஸ்வாசம்: சிறப்பு காட்சியில் குத்தாட்டம் போட்ட இளம்பெண்கள்

  • IndiaGlitz, [Thursday,January 10 2019]

'காதல் மன்னனான' தல அஜித்துக்கு கோடிக்கணக்கான ஆண் ரசிகர்கள் இருப்பது போலவே பெண் ரசிகைகளும் மிக அதிகம் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தை முதல் நாளில் பெண்களும் கண்டு ரசிக்க வேண்டும் என்பதற்காக திருவான்மியூரில் உள்ள ஒரு திரையரங்கில் பெண்களுக்கு என தனி சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

இந்த காட்சிக்கு ஐடி துறையில் பணிபுரியும் பெண்கள் உள்பட ஏராளமான இளம்பெண்கள் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து படம் பார்க்க வந்திருந்தனர். இந்த நிலையில் அஜித் திரையில் தோன்றும்போது ஆர்வம் மிகுதியால் இளம்பெண்கள் திரைக்கு முன் சென்று குத்தாட்டம் போட்டனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆண் ரசிகர்களின் தொல்லை இல்லாமல் படத்தை நன்றாக என்ஜாய் செய்து பார்த்ததாக படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அஜித் ரசிகைகள் தெரிவித்தனர்