ஆஸ்திரேலியாவில் அஜித்தின் 'தக்ஷா' டீம் சாதனை படைக்குமா?

  • IndiaGlitz, [Thursday,September 06 2018]

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த தக்ஷா என்ற டிரோன் குழுவிற்கு அஜித் ஆலோசகராக இருந்தார் என்பதும் இந்த டீம் இந்திய அளவில் நடைபெற்ற கல்லூரிகளுக்கான டிரோன் போட்டியில் முதலிடம் பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் டிரோன் ஒலிம்பிக் என்ற போட்டிக்கு தற்போது உலக அளவில் மொத்தம் 13 டீம்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த டீம்களில் ஒன்றாக இந்தியாவில் இருந்து அஜித்தின் 'தக்ஷா' டீம் தேர்வு பெற்றுள்ளது. அஜித்துடன் இந்த டீம், தற்போது டிரோன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

இந்த போட்டிக்கு ஆஸ்திரேலியா, போலந்து நாடுகளில் இருந்து மூன்று டீம்களும், தாய்லாந்தில் இருந்து இரண்டு டீம்களூம், நெதர்லாந்து, கனடா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனாவில் இருந்து ஒரு டீமும் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளது. இந்தியாவில் இருந்து கலந்து கொள்ளும் டீமுக்கு அஜித் ஆலோசகராக இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு பெருமைய தரும் என்பதில் சந்தேகம் இல்லை. அஜித்தின் டீம் டிரோன் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்று சர்வதேச அளவில் புகழ் பெற நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

More News

உதயநிதியின் சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தில் 2 பிரபல ஹீரோயின்கள்

இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ள அடுத்த படமான 'சைக்கோ' திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், உதயநிதி ஸ்டாலின்,

'சர்கார்' விஜய்க்கு அம்மாவாக நடிக்கும் முன்னாள் குழந்தை நட்சத்திரம்

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'சர்கார்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.

ஜிப்ரானுக்கு அமெரிக்க பல்கலை கொடுத்த கெளரவம்

வசந்தபாலன் இயக்கிய 'வாகை சூடவா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிப்ரான் அதன் பின்னர் கமல்ஹாசனின் 'உத்தமவில்லன்', 'பாபநாசம்', 'விஸ்வரூபம் 2'

சீமராஜாவின் அந்த 20 நிமிடங்கள்: இயக்குனர் வெளியிட்ட ரகசியம்

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கிய 'சீமராஜா' திரைப்படம் வரும் 13ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

அபிராமி கணவருக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்

கடந்த சில நாட்களாக சென்னையை உலுக்கிய சம்பவங்களில் ஒன்று சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த அபிராமி என்ற பெண் தனது கள்ளக்காதலனுடன் ஓடிப்போக இரண்டு குழந்தைகளை கொன்ற கொடூரம்.