அஜித் இப்போது எந்த நாட்டில் இருக்கிறார் தெரியுமா? 'விடாமுயற்சி' எப்போது ஆரம்பிக்கும்?

  • IndiaGlitz, [Saturday,July 08 2023]

அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘விடாமுயற்சி’ என்ற படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்த போதிலும் இந்த படம் குறித்து மற்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

இயக்குனர் மகிழ் திருமேனி தற்போது திரைக்கதை அமைக்கும் பணியில் விறுவிறுப்பாக இருப்பதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் அஜித் மீண்டும் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் அவர் எப்போதுதான் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி அஜித் சுவிட்சர்லாந்தில் இருப்பதாக தெரிகிறது. அங்கு அவர் ரசிகர் ஒருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து அவர் சுவிஸில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘விடாமுயற்சி’ படத்தின் ஆரம்பகட்ட பணிகளுக்கு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என்றும் படப்பிடிப்பும் வெகுவிரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.