ரஜினி-கமலுக்கு எதிராக அஜித்தை களமிறக்குவோம்: தமிழக அமைச்சர்
Send us your feedback to audioarticles@vaarta.com
அதிமுக, திமுக என இரண்டு பெரிய கூட்டணியை தேர்தலில் சந்தித்து வெற்றி பெற வேண்டும் என்றால் ஒரு பெரிய கூட்டணி அமைய வேண்டும் என்றும், ரஜினி, கமல் தனித்தனியாக களம் கண்டால் இந்த கூட்டணியை சமாளிக்க முடியாது என்றும் அரசியல் விமர்சகர்கள் ஏற்கனவே கருத்து கூறி வருகின்றனர் என்பது தெரிந்ததே.
நேற்று நடைபெற்ற ‘கமல்ஹாசன் 60’ நிகழ்ச்சியில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களும் இதனையே மீண்டும் வலியுறுத்தினார். ரஜினி, கமல் கூட்டணி அரசியல்ரீதியாக அமைந்தால் நிச்சயம் அந்த கூட்டணி வலுவாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. மேலும் இந்த கூட்டணிக்கு விஜய் ஆதரவு அளிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘ரஜினி, கமல், விஜய் தான் அரசியலுக்கு வர வேண்டுமா? நடிகர் அஜித் அவர்கள் வரக்கூடாதா? மக்களுக்கு இடையறாது தொண்டாற்றுகின்ற அஇஅதிமுகவிற்கு விஸ்வாசமாக உள்ள நட்சத்திரங்களை நாங்கள் களமிறக்குவோம் என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
ரஜினி, கமல், விஜய் கூட்டணி அமைந்தால் அஜித்தை அதிமுக களமிறக்குமா? அதற்கு அஜித் ஒப்புக்கொள்வாரா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments