'துணிவு' ஸ்பெஷல் காட்சி பார்த்த ஷாலினி அஜித்.. ரியாக்சன் என்ன?

  • IndiaGlitz, [Monday,January 09 2023]

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை நேற்று அஜித்தின் மனைவி ஷாலினி அஜீத் பார்த்தார்.

அஜித்துடன் மஞ்சுவாரியர், சமுத்திரகனி, பிரேம்குமார், பகவதி பெருமாள், ஜான் கொகைன், ஜிபி முத்து உள்பட பலர் நடித்துள்ள துணிவு திரைப்படம் ஒரு வங்கிக்கொள்ளை சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்டது என்றும், முழுக்க முழுக்க பொழுதுபோக்கு மற்றும் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை எச் வினோத் இயக்கி உள்ளார் என்பதும் ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பிரிவியூ தியேட்டரில் ‘துணிவு’ திரைப்படத்தின் ஸ்பெஷல் காட்சி திரையிடப்பட்டது. இந்த காட்சியில் அஜீத் மனைவி ஷாலினி அஜீத் தனது மகள் அனோஷ்காவுடன் பார்த்தார். மேலும் அஜீத் மேனேஜர் சுரேஷ் சந்திரா உள்பட பலர் இந்த படத்தை கண்டுகளித்தனர்.

‘துணிவு’ படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ஷாலினி அஜித்துடன் பலர் செல்பி புகைப்படம் எடுத்து கொண்ட நிலையில் இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஷாலினி அஜீத் ‘துணிவு’ திரைப்படம் மிகவும் நன்றாக வந்துள்ளதாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.