இணைவதற்கு முன் மோதலுக்கு தயாராகும் அஜித்-ஏ.ஆர்.முருகதாஸ்

  • IndiaGlitz, [Tuesday,January 31 2017]

அஜித் நடித்த 'தீனா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் அஜித் படத்தை இயக்கவேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் அவ்வப்போது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். அஜித் சம்மதித்தால் உடனே அவரை இயக்க தயார் என்று ஏ.ஆர்.முருகதாசும் பலமுறை அறிவித்துள்ளார். எனவே விரைவில் அவர் அஜித் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதற்கு முன்னர் அஜித் மற்றும் முருகதாஸ் படங்கள் ஒரே நாளில் மோதும் சூழ்நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது. அஜித் நடித்து வரும் 'தல 57' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் இருந்து ரம்ஜான் தினத்திற்கு மாற்றப்பட்டதாக ஒரு செய்தி வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'மகேஷ்பாபு 23' படமும் அதே நாளில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'தல 57' படமும், மகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படமான 'மகேஷ்பாபு 23' படமும் ஒரே நாளில் வெளியாவது உறுதி செய்யப்பட்டால் அஜித்துக்கு முருகதாஸ் கடும் போட்டியை ஏற்படுத்துவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

விக்ரமுடன் முதன்முறையாக ஜோடி சேரும் தமன்னா

விக்ரம்-விஜய்சந்தர் இணையும் படத்தின் நாயகியாக சாய்பல்லவி நடிப்பார் என்று ஏற்கனவே தகவல்கள் வந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவல்களின்படி இந்த படத்தில் தமன்னா நாயகியாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது...

ரஜினிதான் என் முதல் சாய்ஸ். மோகன்லால் இயக்குனர்

மோகன்லால்-மீனா நடித்த 'த்ரிஷ்யம்' படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நடித்து சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது மீண்டும் இதே ஜோடி நடித்த 'முன்திருவல்லிகள் தளிர்க்கும்போல்' என்ற மலையாள படத்தின் ரீமேக்கில் ரஜினி நடிக்க வேண்டும் என்று அந்த படத்தின் இயக்குனர் ஜிபு ஜாக்கப் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்....

மணிரத்னம்-ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடும் 'அழகியே'

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படம் வெகுவிரைவில் ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி அதிகாலை 12.00 மணிக்கு வெளியாகவுள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்...

விஷ்ணு-ரஜினிக்கு கிடைத்த புதிய புரமோஷன்

'வெண்ணிலா கபடிக்குழு' முதல் 'மாவீரன் கிட்டு' வரை நல்ல தரமான படங்களில் நடித்து வரும் இளையதலைமுறை நடிகர் விஷ்ணு விஷால். இவருக்கும் ரஜினிநட்ராஜ் என்பவருக்கும் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் தற்போது இந்த தம்பதி புரமோஷன் பெற்றுள்ளனர்...

அஜித்தின் 'ஆலுமா டோலுமா' வின் அடுத்த சாதனை

அஜித் நடித்த 'வேதாளம்' திரைப்படத்தில் அனிருத் இசையமைத்து பாடிய 'ஆலுமா டோலுமா' என்ற பாடல் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகப்பெரிய ஹிட்டை பெற்றது. 'கொலைவெறி' பாடலுக்கு பின் இந்த பாடல் அனிருத்துக்கு ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியது.