புரட்சித்தலைவி அம்மா'வுக்கு அஞ்சலி செலுத்திய அஜித்
Send us your feedback to audioarticles@vaarta.com
மறைந்த முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் மறைவால் தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு நேற்று பல்கேரியாவில் இருந்து இரங்கல் செய்தி அனுப்பிய அஜித், உடனே சென்னை திரும்பினார்
நேற்று நள்ளிரவு சென்னை வந்த அஜித், உடனே தன்னுடைய மனைவி ஷாலினியுடன் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட மெரீனா கடற்கரைக்கு சென்று தனது அஞ்சலியை செலுத்தினார். பின்னர் அருகில் இருந்த எம்.ஜி.ஆர் சமாதிக்கும் அஜித் சென்றார்.
மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே அஜித், பல்கேரிய படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout