புத்தர் கோயிலை அடுத்து அஜித் விசிட் செய்த உலகப்புகழ் பெற்ற கோயில்: வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Thursday,September 15 2022]

அஜித் தற்போது லடாக் உள்ளிட்ட பகுதிகளில் பைக் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் அப்போது அவர் சில கோயில்கள் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளையும் பார்வையிட்டு வருகிறார் என்பதும் தெரிந்தது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புத்தர் கோயிலுக்கு சென்று அஜித் வழிபட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் தற்போது உலகப் புகழ்பெற்ற கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவிலுக்கு சென்று வழிபட்டு உள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவிலில் அஜீத் மனமுருகி சுவாமி தரிசனம் செய்த காட்சியும், நந்தியின் வாயிலிருந்து வரும் தீர்த்த நீரை பிடிப்பது போன்ற புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

இந்த நிலையில் அஜீத் நடித்து வரும் ’ஏகே 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் பாங்காங்கில் நடைபெற இருப்பதாகவும் அதில் அஜித், மஞ்சு மஞ்சு வாரியர் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.