வெற்றி துரைசாமி வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய அஜித்.. இருவருக்கும் இடையே இப்படி ஒரு நட்பா?

  • IndiaGlitz, [Tuesday,February 13 2024]

முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சமீபத்தில் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற போது கார் விபத்தில் சிக்கினார். அவரது கார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இருந்த நிலையில் காணாமல் போன வெற்றியை கடந்த சில நாட்களாக மீட்பு படையினர் தேடினர்.

இந்த நிலையில் நேற்று தான் அவரது உடல் மீட்கப்பட்டது. இந்த நிலையில் வெற்றி துரைசாமியின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்ட நிலையில் இன்று அவரது இறுதி சடங்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விபத்தில் மறைந்த வெற்றி துரைசாமியின் வீட்டிற்கு நடிகர் அஜித் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இருவரும் மிக நெருங்கிய நெருங்கிய நண்பர்கள் என்று தற்போது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே வெற்றி துரைசாமி தனது சமூக வலைத்தளத்தில் அஜித்துடன் இருக்கும் சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.