விஜய்யை அடுத்து கருணாநிதியை சந்திக்க வந்த அஜித்

  • IndiaGlitz, [Wednesday,August 01 2018]

திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை தினந்தோறும் முக்கிய பிரமுகர்கள் சந்திக்க வந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நடிகர்களும் கருணாநிதியின் உடல்நலத்தை அக்கறையுடன் விசாரித்து வருகின்றனர்

இந்த நிலையில் சற்றுமும் அஜித் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினுடன் அவர் கேட்டறிந்தார். இந்த சந்திப்பின்போது நடிகர் உதயநிதியும் உடனிருந்தார்.

இன்று காலை நடிகர் விஜய் கருணாநிதியை சந்திக்க காவேரி மருத்துவமனைக்கு வந்ததை அடுத்து அஜித்தும் சந்திக்க வந்துள்ளதாக தெரிகிறது.