அதிகாலையில் திருப்பதிக்கு வந்த அஜித்.. ரசிகர் கொடுத்த மறக்க முடியாத பரிசு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று அதிகாலை நடிகர் அஜித் திருப்பதி வந்த நிலையில் அவருக்கு ரசிகர் ஒருவர் கொடுத்த பரிசு மறக்க முடியாததாக இருக்கும் என கருதப்படுகிறது.
தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித் இன்று அதிகாலை திருப்பதிக்கு வந்ததாகவும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அவர் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டதாகவும் தெரிகிறது.
அதன் பின்னர் அவர் ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தபோது அவரைப் பார்த்த ரசிகர் ஒருவர், அவருக்கு அன்பளிப்பாக பெருமாள் சிலையை கொடுத்ததாகவும் இதையடுத்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது. ரசிகரின் அன்பு பரிசை பெற்றுக் கொண்ட அஜித் அதை தனது மறக்க முடியாத பரிசு என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. அஜித்துடன் அந்த ரசிகர் எடுத்த அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் அஜீத் தற்போது ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் என்பதும் ’குட் பேட் அக்லி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ’விடாமுயற்சி’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாகவும் இதற்காக பட குழுவினர் அஜர்பைஜான் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
’குட் பேட் அக்லி’ படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ’விடாமுயற்சி’ திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com