ரோட்டுக்கடைக்கு விசிட் அடித்த 'தல' அஜித்: இன்ப அதிர்ச்சியில் கடைக்காரர்!

  • IndiaGlitz, [Sunday,January 17 2021]

தல அஜீத் திடீரென ரோட்டு கடை ஹோட்டல் ஒன்றுக்கு விசிட் எடுத்து சாப்பிட்டது அந்தக் கடைக்காரருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தற்போது வாரணாசியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பின் இடையே அஜித் தனது நண்பர்களுடன் வாரணாசியில் உள்ள ரோட்டு கடை ஹோட்டலுக்கு சென்றதாகவும் அங்கு அவர் சாப்பிட்டதாகவும் தெரிகிறது.

முதலில் அஜித் மாஸ்க் மற்றும் தொப்பி அணிந்து வந்ததால் அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை என்றும் ஆனால் அவர் சாப்பிடும் போதும் மாஸ்க்கை கழட்டியதால் கடைக்காரர் அவரை அடையாளம் கண்டு கொண்டு அவரை மரியாதையாக வரவேற்று அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து அந்த கடையின் உரிமையாளர் கூறும்போது ’அஜித் அவர்களை பார்த்ததும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அவர் என்னுடைய கடையில் தயாரான ஒவ்வொரு உணவையும் ரசித்துச் சாப்பிட்டார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு உணவு வகையும் எப்படி செய்யப்பட்டது என்ற விளக்கத்தையும் கேட்டுக்கொண்டு அனைத்து வகை உணவுகளையும் தன்னுடைய மொபைலில் வீடியோ எடுத்துக்கொண்டார் என்று கூறியுள்ளார்.

மேலும் அஜீத்துடன் அவர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாரணாசியில் அஜீத் தனது நண்பர்களுடன் காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்ததாகவும் கூறப்படுகிறது.