வரவிருக்கும் அஜித், விஜய், சூர்யா படங்களுக்குள் உள்ள ஒரு ஒற்றுமை!

  • IndiaGlitz, [Wednesday,March 16 2022]

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான அஜித், விஜய், சூர்யாவின் அடுத்த படங்களில் ஒரு அபூர்வ ஒற்றுமை இருக்கும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது

விஜய் நடித்து முடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்திற்காக பிரம்மாண்டமான செட் போடப்பட்டுள்ளது என்பதும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்த செட்டில் தான் படமாக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் அஜித் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படமான ’அஜித் 61’ திரைப்படத்திற்காக பிரம்மாண்டமான அண்ணா சாலை செட் போடப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பாக ஒரு வங்கியின் செட்டுக்கு படத்தின் கதையில் முக்கியத்துவம் பெறுகிறது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யா நடிக்க இருக்கும் ’வாடிவாசல்’ திரைப்படத்திற்கும் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம் செட் போடப்பட்டு அதில் பெரும்பாலான ஜல்லிக்கட்டு காட்சிகள் படமாக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது .

எனவே ’பீஸ்ட்’, ’அஜித் 61’ மற்றும் ‘வாடிவாசல்’ ஆகிய மூன்று படங்களிலும் செட் முக்கியத்துவம் பெறுகிறது என்பதும், மூன்று படங்களின் பெரும்பாலான காட்சிகள் செட்டில் தான் படமாக்கப்படவுள்ளது என்பது அபூர்வ ஒற்றுமையாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.