அஜித், விஜய்,சூர்யா நடிகையின் கணவருக்கு ரூ.8000 கோடி சொத்து மதிப்பா?
- IndiaGlitz, [Saturday,June 03 2023]
அஜித், விஜய், சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகையின் கணவருக்கு ரூ.8000 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் நடித்த ’ஆழ்வார்’, ’வரலாறு’, விஜய் நடித்த ’சிவகாசி’, ’போக்கிரி’, சூர்யா நடித்த ’கஜினி’ உட்பட பல திரைப் படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை அசின். கமல்ஹாசனின் ’தசாவதாரம்’ என்ற படத்திலும் நடித்திருந்தார் என்பதும் தமிழ் தெலுங்கு மட்டுமன்றி பாலிவுட் இன்னும் சில படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை அசின் கடந்த 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அசின் கணவர் ராகுல் சர்மாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவருக்கு 8,273 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.
ராகுல் சர்மா கடந்த 2000ஆம் ஆண்டு தனது நண்பர்களுடன் இணைந்து மைக்ரோமேக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். செல்போன் உற்பத்தி நிறுவனமான இந்நிறுவனம் இந்தியாவின் முதல் முறையாக இரண்டு சிம் கொண்ட செல்போன்களை தயாரித்தது. மைக்ரோ மைக்ரோமேக்ஸ் நிறுவனத்திற்கு ஹாலிவுட் நடிகர் ஜாக்மேன் என்பவர் அம்பாசிடராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமின்றி AI என்ற செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி கொண்ட எலக்ட்ரிக் பைக்கையும் ராகுல் சர்மா உற்பத்தி செய்தார் என்பதும் இந்த நிறுவனம் கடந்த 2022 ஆம் நிதியாண்டில் மட்டும் 500 கோடி ரூபாய் லாபம் பெற்றதாகவும் தெரிகிறது.
நடிகை அசினையும், ராகுல் சர்மாவையும் நடிகர் அக்ஷய் குமார் தான் அறிமுகப்படுத்தி வைத்தார் என்பதும் அதன் பின்னர் இருவரும் நட்பாக பழகி பின்னர் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.