என்ன நடக்குது டுவிட்டரில்? தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளரை அடிச்சு நொறுக்கிய அஜித் ரசிகர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் 'அடிச்சு தூக்கு' சிங்கிள் பாடல் இணையதளத்தை அதிர வைத்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் ஒருசிலர் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் டுவிட்டர் பக்கத்தில் அடிச்சு தூக்கு போஸ்டரை கமெண்ட் பகுதியில் பதிவு செய்தனர்.
இந்த பதிவை பார்த்த ஸ்டெயின், என்ன நடக்குது டுவிட்டரில்' என்று கேட்க அஜித் ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர். இது தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் போஸ்டர் என்று அவருக்கு விளக்க, அவர்களுக்கு நிகராக விஜய் ரசிகர்களும், அந்த போஸ்டரை கலாய்க்க, ஸ்டெயின் டுவிட்டர் பக்கமே அதிர்ந்தது.
பொதுவாக ஸ்டெயின் ஒரு டுவீட் போட்டால் சுமார் 50 கமெண்ட்டுக்கள் வரைதான் அதிகபட்சமாக பதிவாகும். ஆனால் இந்த பதிவுக்கு சுமார் 1500 கமெண்டுக்களுக்கும் மேல் பதிவானதால் அவருடைய ஆச்சரியம் எல்லையை கடந்தது. இருப்பினும் அஜித், விஜய் யாரென்று அவருக்கு தெரியாததால் அவர் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
What’s happening Twitter?
— Dale Steyn (@DaleSteyn62) December 10, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com