ரீரிலீஸிலும் அஜித் , விஜய் ரசிகர்கள் மோதலா? சென்னையின் முக்கிய திரையரங்கில் பரபரப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித், விஜய் நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் தியேட்டரில் பரபரப்பு ஏற்படும் என்பதும் அஜித், விஜய் ரசிகர்கள் மாறி மாறி தங்களுக்கு விருப்பமான நடிகரின் பெயர்களை கோஷம் போடும் போது சில சமயம் பதற்ற நிலை ஏற்படும் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் தற்போது அஜித், விஜய் படங்களின் ரீரிலீஸ் ஒரே திரையரங்க வளாகத்தில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் கூட இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் நடித்த ’கில்லி’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரீரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் இன்னும் அந்த படம் ஹவுஸ்புல் காட்சிகளாக பல திரையரங்குகளில் திரையிடப்பட்டு கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இன்று அஜித் பிறந்தநாள் என்பதால் அவர் நடித்த ’தீனா’ திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கு வளாகத்தில் ’கில்லி’ மற்றும் ’தீனா’ ஆகிய இரண்டு படங்களும் அருகருகே உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
இந்த நிலையில் ’தீனா’ படத்தின் இடைவேளையின் போது திடீரென அஜித் ரசிகர்கள் தியேட்டரை விட்டு வெளியே வந்து ’கில்லி’ படம் திரையிட்ட தியேட்டருக்குள் சென்று அஜித் அஜித் என்று கோஷமிட்டதாகவும் பதிலுக்கு விஜய் ரசிகர்களும் விஜய் விஜய் என்ற கோஷம்மிட்டதாகவும் இதனால் அந்த இடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதை எடுத்து திரையரங்கு காவலர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
கில்லி ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி படம் ஓடி கொண்டிருக்கும் போது கதவை திறந்து அஜித் ரசிகர்கள் செய்த காரியம்..#GhilliReRelease | #DheenaReRelease | #AjithKumar | #AjithFans | #AK | #RohiniCinemas | #PolimerNews pic.twitter.com/43oHhj3ZPd
— Polimer News (@polimernews) May 1, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments