பேரறிவாளன் முதலில் இதை செய்திருக்க வேண்டும்: அஜித், விஜய் இயக்குனரின் டுவிட்
Send us your feedback to audioarticles@vaarta.com
பேரறிவாளன் விடுதலை ஆனவுடன் முதலில் இதை செய்திருக்க வேண்டும் என அஜித் விஜய் படங்களை இயக்கிய இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் .
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டர். இதனை அடுத்து அவர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல அரசியல்வாதிகளை சந்தித்து தனது விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிலையில் அஜித் நடித்த திருப்பதி, விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி உள்பட பல படங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு, பேரறிவாளன் விடுதலை குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பேரறிவாளன் விடுதலைக்கு முதன்முதலாக சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள். பேரறிவாளன் விடுதலையானவுடன் முதன்முதலில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்காமல் ஜெயலலிதா சிலைக்குத்தான் மாலை அணிவித்திருக்க வேண்டும். இல்ல அவரின் சமாதிக்காவது போயிருக்க வேண்டும்!
இயக்குனர் பேரரசுவின் இந்த டுவிட்டுக்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமென்ட்ஸ் பதிவாகி வருகிறது.
பேரறிவாளன் விடுதலைக்கு முதன்முதலாக சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்.
— PERARASU ARASU (@ARASUPERARASU) May 22, 2022
பேரறிவாளன் விடுதலையானவுடன் முதன்முதலில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்காமல் ஜெயலலிதா சிலைக்குத்தான் மாலை அணிவித்திருக்க வேண்டும்.
இல்ல அவரின் சமாதிக்காவது போயிருக்க வேண்டும்! pic.twitter.com/FM3mxeQsvO
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout