அஜித், விஜய்யுடன் தன்னை ஒப்பிட்ட சிவகார்த்திகேயன்

  • IndiaGlitz, [Thursday,May 17 2018]

பிரபல டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடித்துள்ள 'ஒரு குப்பை கதை' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஆர்யா, இயக்குனர் அமீர் உள்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசியபோது, 'டான்ஸ் மாஸ்டராக இருந்த தினேஷ், தற்போது ஹீரோவாகியுள்ளார். அவர் ஹீரோவாகவும் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். ஒருசிலருக்கு மட்டும் ஒரே இடத்தில் இருக்க பிடிக்காது. அடுத்தடுத்து முயற்சிகள் எடுத்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் இந்த ஆர்வத்தை சிலர் தடுக்க நினைப்பார்கள். அதையெல்லாம் முறியடித்து தான் முன்னுக்கு வரவேண்டும்

நான் ஹீரோவாக நடிக்கும்போது கூட என்னையும் இப்படித்தான் கூறினார்கள். விஜய் டிவியிலேயே இருக்கலாமே, ஹீரோ என்றால் ரொம்ப கஷ்டம் என்று கூறினார்கள். அப்போது, அஜித், விஜய், ரஜினி போன்றவர்கள்தான் ஹீரோ. நான் ஹீரோ இல்லை, முன்னணி நடிகர் மட்டுமே' என்று அவர்களுக்கு பதிலாக கூறிவிடுவேன்.

நல்ல கதையுடன், திறமையை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்தால் மக்கள் நம்மை கண்டிப்பாக ஹீரோவாக ஏற்றுக்கொள்வார்கள். அதுபோல் தினேஷ் மாஸ்டரையும் ஹீரோவாக ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று சிவகார்த்திகேயன் பேசினார்.

More News

 ரூ.56 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி: எடியூரப்பா போட்ட முதல் உத்தரவு

கர்நாடக சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி எம்.எல்.ஏக்கள் கிடைக்கவில்லை.

முட்டை, செருப்பால் அடித்து வெளியேற்றுவோம்: குஷ்புவுக்கு காங்கிரஸ் தலைவர் எச்சரிக்கை

நடிகை குஷ்பு திமுகவில் இருந்தபோது முட்டை, செருப்பால் அடித்து வெளியேற்றப்பட்டவர். அதே நிலை மீண்டும் ஏற்படும் நிலையை குஷ்பு உருவாக்க வேண்டாம்

இந்தியாவுக்கும் கர்நாடகத்திற்கும் இன்று சோக தினம்: முதல்வரின் டுவீட்

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கி வருகிறது.

தனுஷ்-அனிருத் இணையும் படத்தின் அறிவிப்பு எப்போது?

DNA என்ற பெயரில் தனுஷ் மற்றும் அனிருத் இணைந்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆகின. 3 படத்தில் தொடங்கிய இந்த கூட்டணி எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, மாரி வரை தொடர்ந்தது.

போதை மருந்து கடத்துகிறாரா நயன்தாரா?

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திரையுலகிற்கு வந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் நம்பர் ஒன் இடத்தை விடாமல் தக்க வைத்து கொண்டிருக்கின்றார்.