ஒரே நாளில் அஜித், விஜய், சிம்பு படங்கள்: ரசிகர்கள் குஷி!

  • IndiaGlitz, [Tuesday,April 26 2022]

ஒரே நாளில் அஜீத், விஜய், சிம்பு நடித்த படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளதை அடுத்து ரசிகர்கள் குஷ்யாகியுள்ளனர்.

வரும் மே ஒன்றாம் தேதி அரசு விடுமுறை தினத்தில் ஜீ டிவியில் அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் வெளியாக உள்ளது. மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாள் என்பதால் இந்த படம் ரசிகர்களுக்கான விருந்தாக பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சன் டிவியில் அதே தேதியில் விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வலிமை மற்றும் மாஸ்டர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாலை ஆறு முப்பது மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக இரு தொலைக்காட்சிகளுக்கும் இடையே டிஆர்பி ரேட்டிங் கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி விஜய் டிவியில் அன்றையதினம் சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதால் சிம்பு ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து ரசிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.