அஜித் - விக்னேஷ் சிவனின் 'ஏகே 62' படப்பிடிப்பு தொடங்குவது எப்போது? மாஸ் தகவல்!

அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஏகே 61’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் ’ஏகே 62’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தை 2023ஆம் ஆண்டு தீபாவளி திருநாளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனிருத் இசையில் உருவாகும் இந்த படம் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னரே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் அஜித் லண்டன் சென்றிருந்த போது லைகா நிறுவனர் சுபாஷ்கரனை சந்தித்து பேசியதாகவும் அதேபோல் சுபாஷ்கரன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை வந்த போது அஜித்தை அவருடைய வீட்டிற்கு சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.