'துணிவு' ரிலீசுக்கு முன்பே வியாபாரத்தை தொடங்கிய 'ஏகே 62'

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் விஜய்யின் 'வாரிசு’க்கு போட்டியாக வரும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’துணிவு’ படத்தை அடுத்து அஜீத் நடிக்க இருக்கும் ‘ஏகே 62’ என்ற படத்தை லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே. அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே இந்த படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ‘ஏகே 62’படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகையைக் கொடுத்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய்யின் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே வியாபாரம் தொடங்கி விட்டதைப் போலவே அஜித்தின் ‘ஏகே 62’ படத்தின் வியாபாரமும் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'வந்தது ஓவியா இல்லடா, ஆவிடா... யோகிபாபு-ஓவியாவின் 'பூமர் அங்கிள்' டிரைலர்

யோகி பாபு, ஓவியா உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் 'பூமர் அங்கிள்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

'நீடூடி வாழ்க'.. 'மாமன்னன்' வீடியோவை வெளியிட்டு வாழ்த்து கூறிய ஏ.ஆர்.ரஹ்மான்!

உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பல பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்தோம்.

இதற்கு மேல் 'த்ரிஷ்யம் 'படத்தை நீட்டிக்கும் எண்ணம் இல்லை: ஜித்து ஜோசப்

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான 'த்ரிஷ்யம் திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் இந்த படம் தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் வெளியாது தெரிந்ததே. 

'தலை வணங்குகிறேன்'.. சூப்பர்ஹிட் படத்திற்கு த்ரிஷா கொடுத்த விமர்சனம்!

சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படத்தை பார்த்த நடிகை த்ரிஷா 'தலைவணங்குகிறேன்' என தனது விமர்சனத்தை தெரிவித்துள்ள நிலையில் அவருடைய பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

பிரிந்த மனைவியுடன் இணைந்து தியேட்டரில் படம் பார்த்த அஜித் பட நடிகர்!

பிரிந்த மனைவியுடன் இணைந்து அஜித் பட நடிகர் ஒருவர் தியேட்டரில் வந்து படம் பார்த்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.