வித்யூலேகாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜீத்?

  • IndiaGlitz, [Saturday,September 19 2015]

ஏற்கனவே 'வீரம்' படத்தில் அஜீத்துடன் நடித்திருந்த நகைச்சுவை நடிகை வித்யூலேகா ராமன், சமீபத்தில் 'தல 56' படத்திலும் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம். இந்நிலையில் அஜீத், வித்யூலேகா படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது.

பிளாஷ்பேக்கில் வரும் சிறு கேரக்டர் என்றாலும் அஜீத்துடன் நடிப்பதையே பெருமையாக கூறிவந்த வித்யூலேகாவுக்கு, அஜீத் இன்னொரு இன்ப அதிர்ச்சியையும் நேற்று அளித்துள்ளார். நேற்றைய படப்பிடிப்பு முடிந்ததும் அஜீத் தனது கையாலே பிரியாணி செய்து அதை வித்யூலேகா உள்பட படக்குழுவினர்களுக்கு அளித்துள்ளார். அஜீத்தின் பிரியாணியை முதன்முதலாக ரசித்து சாப்பிட்டதாக வித்யூலேகா, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

'தல 56' படத்தில் வித்யூலேகாவின் சம்பந்தபட்ட படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துவிட்டதாகவும், அதன் காரணமாகவே அவருக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. 'தல 56' தவிர மாப்ளே சிங்கம்', தண்ணிவண்டி ஆகிய தமிழ் படங்களிலும் மேலும் நான்கு தெலுங்கு படங்களிலும் வித்யூலேகா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.