செல்பி கேட்ட ரசிகர்கள்: குணமா, அன்பா மறுத்த அஜித்
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித்தின் திரைப்படங்கள் குறித்தும், நடிப்பு குறித்தும் மாறுபட்ட விமர்சனங்கள் வந்தாலும் அவருடைய மனிதநேயம் குறித்து அனைவருக்குமே ஒருவித மரியாதை இருப்பது உண்மை. குறிப்பாக தன்னுடன் புகைப்படம் எடுக்க வரும் ரசிகர்களை அவர் தட்டி கழித்ததே இல்லை.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பள்ளிக்கு அஜித் சென்ற நிலையில் அவருடன் செல்பி எடுக்கவும் புகைப்படம், வீடியோ எடுக்கவும் மாணவர்களும் பணியாளர்களும் ஆர்வத்துடன் அவரை அணுகினர். ஆனால் இதனை அவர் அன்புடன் மறுத்துவிட்டார். இது பள்ளி இங்கு வேண்டாம், இன்னொரு நாள் நானே உங்களை அழைக்கின்றேன். அப்போது எடுத்து கொள்ளலாம். தம்பி அந்த கேமிராவை கொஞ்சம் ஸ்டாப் பண்ணுங்க என்று அன்புடன் கேட்டுக்கொண்டார்.
இந்த வீடியோவில் அவருடைய பணிவு, அடக்கம், எளிமை தெரிவதால் அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments