அஜீத்தின் 'வேதாளம்'. டீசர் விமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
'தல' அஜீத் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 'வேதாளம்' திரைப்படத்தின் டீசர் நேற்று நள்ளிரவு மிகச்சரியாக 12 மணிக்கு இணையதளத்தில் வெளியானது.
இந்த படம் அஜீத்துக்கு முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என்பது டீசரை பார்த்தாலே விளங்குகிறது. அஜீத்துக்கு நெகட்டிவ் வேடம் போல தோன்றும் இந்த டீசரில் அஜீத்தை தேடும் வில்லனாக கபீர்சிங் நடித்திருப்பதுபோல் தெரிகிறது. முதல் காட்சியிலேயே பின்னணியில் அஜீத்தின் குரல் ஒலித்து கொண்டிருக்க பைக்கில் அவர் ஸ்டைலாக உட்காரும் விதமே அனைவரையும் அசத்தியுள்ளது.
'யார்ரா நீ...எங்கடா இருக்க...? என்று வில்லன் கபீர்சிங் கூறுவதும் அதற்கு அஜீத் 'கண்ணாம்பூச்சி ரே ரே...என்பதும், 'அவன் ஓடி ஒளியுற ஆள் இல்லை தேடி அடிக்கிற ஆளு' என அஜீத்துக்காக வில்லன் கபீர்சிங் பஞ்ச் வசனம் பேசுவதும், இறுதியில் அஜீத் 'தெறிக்க விடலாமா? என்ற பேசும் தெறி வசனத்துடன் டீசர் முடிகிறது.
இந்த டீசரில் அனிருத்தின் அட்டகாசமான பின்னணி இசையும் நிச்சயம் அனைவரையும் கவரும். இந்த டீசரின் மூலம் 'வேதாளம்' படக்குழுவினர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக இயக்குனர் 'சிறுத்தை சிவா', வீரம் படத்தை முழுக்க கிராமப் பின்னணியில் இயக்கியிருந்தார். ஆனால் இந்த படம், ஹெலிகாப்டர், துப்பாக்கியுடன் கூடிய வீரர்கள் என படுரிச்சாக, சிட்டி பின்னணியில் ஒரு மாஸ் படமாக இயக்கியுள்ளார் என்பது தெரியவருகிறது.
மேலும் இந்த படத்திற்கு 'வேதாளம்' என்ற டைட்டிலை பொருத்தமாகத்தான் படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர் என்பது இந்த டீசர்இன் மூலம்உறுதியாகியுள்ளது.
மேலும் அனைவரும் எதிர்பார்த்த ஸ்ருதிஹாசன் மற்றும் லட்சுமிமேனன் ஆகியோர் இந்த டீசரில் ஒரு ஷாட்டில்கூட இல்லாதது ஒரு சிறு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அடுத்து வரும் டிரைலரில் இவர்கள் இருவரும் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டீசரை பார்த்த பிறகு அஜீத் ரசிகர்கள் மட்டுமின்றி ஆக்சன் பட பிரியர்களும் இந்த திரைப்படத்தை வெள்ளித்திரையில் காண மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com