இணையதள வரலாற்றில் 'வேதாளம்' டீசர் செய்த புதிய சாதனை
Send us your feedback to audioarticles@vaarta.com
'தல' அஜீத்தின் 'வேதாளம்' படத்தின் டீசரை நேற்று வெளியான நிமிடம் முதல் இந்த நிமிடம் வரை அஜீத் ரசிகர்கள் முதல் அனைத்து தரப்பினர்களும் மிக அதிகமான அளவில் பார்த்து வருகின்றனர். டீசர் வெளியான நள்ளிரவிலும் பலர் கண்விழித்து இந்த படத்தின் டீசரை பார்த்து வந்ததோடு #VedalamTeaserBlast என்ற ஹேஷ்டேக்கை அதிகாலை 2மணிக்கு மேலும் உலக அளவில் டிரெண்டில் வைத்திருந்தனர்.
மேலும் யூடியூப் இணையதள வரலாற்றில், வெளியான முதல் ஒருமணி நேரத்தில் 34,000 லைக்குகள் பெற்று சாதனை பெற்ற Taylor Shift's Bad Blood என்ற வீடியோ செய்த சாதனையை அஜீத்தின் வேதாளம் டீசர் முறியடித்துள்ளது. வேதாளம்' டீசர் ஒரு மணி நேரத்தில் 50,000க்கும் அதிகமான லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
மேலும் இந்த டீசரை பார்த்தவர்களின் எண்ணிக்கை ஆறு மணி நேரத்தில் 5 லட்சத்தை நெருங்கிவிட்டது. எனவே இன்னும் பல புதிய சாதனைகளை 'வேதாளம்' படத்தின் டீசர் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com