close
Choose your channels

அஜீத்தின் 'வேதாளம்': டீசர், பட ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்

Tuesday, October 6, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல' அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் டீசர் நாளை மறுநாள் வியாழக்கிழமை அதிகாலை 12 மணிக்கு ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அவர்கள் சாய்பாபாவின் பக்தர் என்பதால் 'வேதாளம்' படம் வரும் நவம்பர் 5ஆம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் ஆகும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும்.

அக்டோபர் 8ஆம் தேதி டீசர் வெளியீடு, அக்டோபர் 16ஆம் தேதி பாடல் வெளியீடு மற்றும் நவம்பர் 5ஆம் தேதி படத்தின் வெளியீடு என அடுத்தடுத்து அஜீத் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் செய்திகள் வெளிவந்துள்ளதால் அஜீத் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், சூரி, தம்பிராமையா, ராகுல்தேவ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment