அஜீத்தின் 'வேதாளம்': டீசர், பட ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Tuesday,October 06 2015]

தல' அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் டீசர் நாளை மறுநாள் வியாழக்கிழமை அதிகாலை 12 மணிக்கு ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அவர்கள் சாய்பாபாவின் பக்தர் என்பதால் 'வேதாளம்' படம் வரும் நவம்பர் 5ஆம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் ஆகும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும்.

அக்டோபர் 8ஆம் தேதி டீசர் வெளியீடு, அக்டோபர் 16ஆம் தேதி பாடல் வெளியீடு மற்றும் நவம்பர் 5ஆம் தேதி படத்தின் வெளியீடு என அடுத்தடுத்து அஜீத் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் செய்திகள் வெளிவந்துள்ளதால் அஜீத் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், சூரி, தம்பிராமையா, ராகுல்தேவ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

More News

நெகட்டிவ் விமர்சனங்களை மீறி வெற்றி நடை போடுகிறது 'புலி'

விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது...

நான் வரி ஏய்ப்பு செய்யவில்லை. விஜய் விளக்கம்

இளையதளபதி விஜய் கடந்த ஐந்து ஆண்டுகளாக வரியை முழுமையாக கட்டவில்லை என ஒருசில ஊடகங்களில் கடந்த...

'எந்திரன் 2' படத்தின் வில்லனாகும் ஹாலிவுட் சூப்பர்ஸ்டார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் 'எந்திரன் 2'. இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க பலம் வாய்ந்த வில்லன் ...

தனுஷ்-பிரபுசாலமன் படப்பிடிப்பின் முக்கிய விபரம்

தனுஷ் நடித்து முடித்துள்ள 'விஐபி 2' திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில்..

'பாகுபலி 2' படத்தின் ரிலீஸ் தேதி?

இந்தியாவின் மிக அதிகமான பட்ஜெட் மற்றும் தென்னிந்தியாவில் மிக அதிகமான வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்ற 'பாகுபலி' ...