அஜீத் ரசிகர்களை குஷிப்படுத்தும் முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Friday,October 09 2015]

தல அஜீத் நடித்த 'வேதாளம்' படத்தின் டீசர் நேற்று அதிகாலை 12 மணிக்கு வெளியாகி, ஒரே மணி நேரத்தில் உலக சாதனை, மிகக்குறைவான நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள், அதிக லைக்குகள் பெற்ற டீசர், என பல சாதனைகளை செய்திருக்கும் நிலையில் அஜீத் ரசிகர்களை குஷிப்படுத்தும் இன்னுமொரு செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

வேதாளம்' படத்தின் அதிகாரபூர்வமான போஸ்டர்கள் இன்று இணையதளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. அஜீத்தின் வித்தியாசமான கெட்டப்பை டீசரில் பார்த்த ரசித்த ரசிகர்கள் இன்று வெளியாகவுள்ள 'வேதாளம்' போஸ்டர்களையும் வரவேற்க தயாராகியுள்ளனர்.

இந்நிலையில் வேதாளம்' டீசர் வெளியான 40 மணி நேரத்தில் இரண்டு மில்லியன்களுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.