அஜீத் போன்று ஒரு அண்ணன். இளம்பெண்களை ஏங்கவைக்குமா 'வேதாளம்'?
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. அஜீத் ரசிகர்கள் முதல் நாளிலேயே இந்த படத்தை பார்க்க டிக்கெட்டுக்களை வாங்கி வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் கூட வெளிவராத நிலையில் இந்த படத்தின் கதை, காட்சிகள், குறித்து பல்வேறு யூகமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் 'வேதாளம்' திரைப்படம் ஆக்சன், த்ரில்லர், சஸ்பென்ஸ், படம் இல்லை என்றும் முழுக்க முழுக்க ஒரு ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படம் என்றும் குறிப்பாக அண்ணன் தங்கை பாசத்தை மிக ஆழமாக கூறும் கதை என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொரு இளம்பெண்ணும் அஜீத் கேரக்டர் போன்று நமக்கு ஒரு அண்ணன் இல்லையே என ஏங்க வைக்கும் அளவுக்கு அண்ணன் - தங்கை பாசத்தை இந்த படத்தில் இயக்குனர் வெளிப்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. அஜீத்தும் லட்சுமிமேனனும் அண்ணன் தங்கையாக நடிக்கவில்லை என்றும் வாழ்ந்திருக்கின்றார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த தகவல் வெளிவந்ததில் இருந்து 'வேதாளம்' படத்திற்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments