close
Choose your channels

மதுரை மக்களை ஆச்சரியப்படுத்திய அஜீத் ரசிகர்கள்

Thursday, September 24, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜீத்துக்கு சமூகவலைத்தளங்களில் பெரும்புகழ் இருக்கின்றது என்பதை அனைவரும் அறிவோம். அஜீத் பட செய்திகளோ அல்லது அஜீத்தின் வேறு செய்திகளோ வெளிவதால் உடனடியாக சமூக வலைத்தளத்தில் இந்திய அளவில், உலக அளவில் டிரெண்டாக்கிவிடுவதே அஜீத் ரசிகர்களின் முதல் வேலையாக இருக்கும். சின்ன சின்ன செய்திகளுகே டிரெண்டாக்கி வரும் அஜீத் ரசிகர்கள், அஜீத் பட டைட்டில் என்றால் சும்மா விடுவார்களா? நேற்று இரவு முதல் 'வேதாளம்' டைட்டில் உலக அளவில் டிரெண்டில் உள்ளது.

இந்நிலையில் எதையும் வித்தியாசமாக செய்யும் மதுரை ரசிகர்கள், நேற்றிரவு அஜீத் படத்தின் டைட்டில் 'வேதாளம்' என்று அறிவிக்கப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் வெளியான ஒருசில நிமிடங்களில் பர்ஸ்ட் லுக்கின் கட்-அவுட்டினை தயார் செய்து மதுரையின் முக்கிய சாலை ஒன்றில் மாலை அணிவித்து வைத்துள்ளனர். ஒருசில நிமிடங்களில் இந்த கட்-அவுட்டை மதுரை அஜீத் ரசிகர்கள் தயார் செய்ததை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

அஜீத் மீது அவரது ரசிகர்கள் இந்த அளவுக்கு வெறித்தனமான அன்பு வைத்திருப்பதற்கு அவர் ஒரு சிறந்த நடிகர் என்பது மட்டும் காரணம் இல்லை என்றும் அவர் ஒரு சிறந்த மனிதநேயம் உள்ள நபர் என்பதும் ஒரு முக்கிய காரணம் என மதுரை மக்கள் கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment