close
Choose your channels

அஜீத்தின் 'வேதாளம்' படத்துடன் மோதுகிறதா 'விஜய் 59"

Monday, September 28, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் விஜய் நடித்த 'புலி' படத்தின் இரண்டாவது டிரைலரும், அஜீத் நடித்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கும் ஒரே நாளில் வெளிவந்து இணையதளங்களையும், சமூக இணையதளங்களையும் கலக்கியது என்பதை பார்த்தோம். அதேபோல் 'புலி' ரிலீசாகும் அக்டோபர் 1ஆம் தேதி, அஜீத்தின் 'வேதாளம்' படத்தின் டிரைலரும் ரிலீசாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக மீண்டும் ஒருமுறை விஜய், அஜீத் படங்கள் மோதவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அஜீத்தின் 'வேதாளம்' படம் ரிலீசாகும் தீபாவளி தினத்தில் 'விஜய் 59' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளிவரும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே 'விஜய் 59' படத்தின் டைட்டில் 'மூன்று முகம்' என்ற தகவல் அதிகாரபூர்வமற்ற நிலையில் வெளிவந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக தீபாவளி தினத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்காள் உற்சாகமாகியுள்ளனர். இவ்வருட தீபாவளி தினம், அஜீத்-விஜய் ஆகிய இரண்டு மாஸ் நடிகர்களின் ரசிகர்களுக்கும் கொண்டாட்டமான நாள்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment