மலையாள படங்களையும் புரமோஷன் செய்யும் அஜித்-விஜய்

  • IndiaGlitz, [Tuesday,March 29 2016]

கோலிவுட் திரையுலகில் பல இளையதலைமுறை நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் அஜித் அல்லது விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளையோ, வசனங்களையோ அல்லது அவர்களது ரசிகர்களாகவோ நடித்து தங்கள் படத்திற்கு பரபரப்பை ஏற்படுத்துகின்றனர். இதேபோல் நடிகைகளும் பலர் தாங்கள் அஜித் அல்லது விஜய்யின் தீவிர ரசிகைகள் என கூறிக்கொள்வதும் வழக்கமான ஒன்று. பல திரைப்படங்களில் ஒருசில காட்சிகளில் மட்டும் தோன்றும் அஜித் அல்லது விஜய்க்கு தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே.


இந்நிலையில் இந்த நிலை தற்போது மாநிலம் தாண்டியும் ஒர்க் அவுட் ஆகியுள்ளது. சமீபத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த 'களி' படத்தில் அஜித் நடித்த 'வேதாளம்' படத்தின் சூப்பர் ஹிட் பாடலான 'ஆலுமா டோலுமா' பாடலின் ஒருசில காட்சிகள் இடம்பெறுகிறது. இந்த பாடல் திரையில் தோன்றும்போது திரையரங்குகள் அதிர்வதாகவும், ரசிகர்கள் சீட்டை விட்டு எழுந்து ஆட்டம் போடுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே விஜய் ரசிகராக மலையாள நடிகர் பிரித்விராஜ் நடித்த 'பாவாட' என்ற திரைப்படம் கேரளாவில் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது மற்றொரு மலையாள நடிகர் துல்கர் சல்மானின் படத்தில் அஜித் பாடல் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் தமிழ் நடிகர்களையும் தாண்டி மலையாள நடிகர்களின் படங்களுக்கும் அஜித்-விஜய் பெயர்கள் புரமோஷன்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.