'வேதாளம்' டிராக் லிஸ்ட். முழுவிபரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜீத், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள 'வேதாளம்' திரைப்படத்தின் பாடல்கள் வரும் 16ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், பாடல்களின் டிராக் லிஸ்ட் சற்று முன்னர் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்காக அனிருத் மொத்தம் ஐந்து பாடல்களை கம்போஸ் செய்துள்ளார். அதன் விபரங்கள் வருமாறு:
1. வீர விநாயகா: இந்த பாடலை கவிஞர் விவேகா எழுதியுள்ளார். அனிருத் மற்றும் விஷால் தல்டானி ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். இந்த பாடல் அஜீத்தின் அறிமுகப் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. Don't You Mess With Me: இந்த பாடலை படத்தின் நாயகி ஸ்ருதிஹாசன் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் ஆகியோர் பாடியுள்ளனர். கார்கி இந்த பாடலை எழுதியுள்ளார்.
3. உயிர் நதி கலங்குதே: இந்த பாடலை கவிஞர் விவேகா எழுத ரவிசங்கர் பாடியுள்ளார்.
4. The Theri Theme: இந்த பாடலை சிவா எழுத அனிருத் பாடியுள்ளார்.
5. ஆலுமா டோலுமா: இந்த பாடலை ரோகேஷ் எழுத அனிருத் மற்றும் பாட்ஷா பாடியுள்ளனர். இந்த பாட்ஷா பாலிவுட்டில் பல பிரபலமான ராப் பாடல்களை பாடியுள்ளவர் என்பதும் முதன்முதலாக தமிழ்ப்படத்தில் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com