close
Choose your channels

அஜீத்தின் 'வேதாளம்' சென்சார் விபரங்கள்

Friday, October 30, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜீத் நடித்த 'வேதாளம்' படத்திற்கு படக்குழுவினர் எதிர்பார்த்தபடியே 'யூ' சர்டிபிகேட் கிடைத்துள்ளதாக சற்று முன்னர் வெளிவந்த தகவல் தெரிவிக்கின்றது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த முந்தைய படமான 'வீரம்' படத்திற்கும் 'யூ' சர்டிபிகேட் கிடைத்துள்ள நிலையில், 'வேதாளம்' படமும் 'யூ' சர்டிபிகேட் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'வேதாளம்' படத்திற்கு 'யூ' சர்டிபிகேட் கிடைத்துள்ளதால் இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்பதால் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் இணையதளங்களில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ள 'வேதாளம்' படத்தினை கண்டுகளிக்க அஜீத் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் தயாராகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment