சுமார் 5000 கிமீ பைக்கில் எங்கு சென்றார் தல அஜித்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் அவர்கள் ஒரு பைக் விரும்பி என்பதும் அவர் பல நேரங்களில் நீண்ட தூரம் பைக்கில் செல்வது குறித்த தகவல்கள் வெளிவந்திருக்கின்றன என்பதும் தெரிந்ததே. சமீபத்தில்கூட ஐதராபாத்தில் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது சென்னையிலிருந்து பைக்கிலேயே ஐதராபாத் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அவர் சுமார் 5000 கிலோ மீட்டர் பைக்கிலேயே சென்றுள்ள தகவல்கள் வெளிவந்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது, சமீபத்தில் வாரணாசியில் ரோட்டோர கடை ஒன்றில் அஜித் சாப்பிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் வாரணாசிக்கு அஜித் ஏன் சென்றார் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. அஜித் சென்னையில் இருந்து சாலை வழியே சிக்கிம் மாநிலத்துக்கு சென்றதாகவும் அதன் பின்னர் சிக்கிமில் இருந்து மீண்டும் பைக் மூலமாகவே சென்னை திரும்பியதாகவும் தெரிகிறது.
சென்னையிலிருந்து சிக்கிம் 2400 கிலோமீட்டர் என்பதால் கிட்டத்தட்ட அவர் சிக்கிம் சென்று மீண்டும் சென்னை வர சுமார் 5000 கிலோ மீட்டர் தூரம் பைக்கிலேயே சென்றுள்ளார் என்பதும் அவ்வாறு அவர் பைக்கில் செல்லும் போது தான் இடையில் வாரணாசியில் ஒரு ரோட்டுக் கடையில் அவர் சாப்பிட்டதும் அந்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments