'வலிமை' படத்தில் அஜித் கேரக்டர்: டிரெண்டான ஹேஷ்டேக்
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் நேற்று முதல் அஜித் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்ற செய்தி வந்ததையும் பார்த்தோம்.
இந்த நிலையில் ’வலிமை’ படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் கடந்த சில மாதங்களில் வெளிவராததால் அஜித் ரசிகர்கள் மிகவும் அதிருப்தியுடன் உள்ளனர். இந்த நிலையில் சற்றுமுன் திடீரென டுவிட்டரில் #ஈஸ்வரமூர்த்திஐபிஎஸ் என்ற ஹேஷ்டேக் டிரண்டாகி வருகிறது.
’வலிமை’ படத்தில் அஜீத் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என்பது ஏற்கனவே தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் அவருடைய கேரக்டர் பெயர் ஈஸ்வரமூர்த்தி என்று செய்திகள் கசிந்ததன் அடிப்படையில் தற்போது இந்த ஹேஷ்டேக் டிரண்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெச்.வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர்ராஜா இசையில், போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் ஜோடியாக ஹூமா குரோஷி நடித்து வரும் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் கார்த்திகேயாவும், நகைச்சுவை கேரக்டரில் யோகிபாபுவும் நடித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout