இது அஜித்தின் 'உலகம் சுற்றும் வாலிபன்'. சத்யஜோதி தியாகராஜன்

  • IndiaGlitz, [Thursday,August 04 2016]

எம்.ஜி.ஆர் நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' உலகின் பல நாடுகளில் படமாக்கப்பட்டது போல அஜித்தின் 57வது படமும் ஐரோப்பிய நாடுகள் உள்பட உலகின் பல நாடுகளில் படமாக்கப்படவுள்ளதால் இந்த படத்தை அஜித்தின் உலகம் சுற்றும் வாலிபன் என்று கூறலாம் என இந்த படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கூறியுள்ளார்.
மேலும் அஜித் இந்த படத்தில் இண்டர்போல் அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும், அவருடைய கேரக்டர் ஸ்டைலிஷாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் நாயகிகளாக காஜல் அகர்வால் மற்றும் அக்சராஹாசன் நடிப்பதை உறுதி செய்த தியாகராஜ், இந்த படத்தின் 70% படப்பிடிப்பு வெளிநாட்டிலும் 30% இந்தியாவிலும் படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
மேலும் இந்த படத்தில் நான்கு பாடல்களை அனிருத் கம்போஸ் செய்யவுள்ளதாகவும், ஏற்கனவே தீம் மியூசிக்கை அவர் தயார் செய்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஆடி-18ல் இந்த படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் உள்ள பெல்கிரேடில் தொடங்கியுள்ளதாகவும், இந்த படம் வரும் 2017ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

'கபாலி'க்கு கிடைத்த ரூ.100 கோடி எக்ஸ்ட்ரா வசூல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த 22ஆம் தேதி ரிலீஸ் ஆகி ரூ.400 கோடி...

அமலா பாலுடன் பிரிவு- விஜய் சொல்லும் உண்மைகள்

”நேர்மையும் நம்பிக்கையும்தான் திருமண பந்தத்துக்கான அடித்தளம்.அதில் பிறழ்வு ஏற்பட்டால் உறவு அர்த்தமற்றதாகிவிடும்” என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஜய்.

ரஜினியின் டுவிட்டர் பக்கம் ஹேக்கிங் செய்யப்பட்டதா? செளந்தர்யா தகவல்

உலக அளவில் பிரபலமான விஐபிக்களின் ஃபேஸ்புக், டுவிட்டர் கணக்குகள் அவ்வப்போது ஹேக்கர்களால் ஹேக்கிங் செய்யப்பட்டு வருவது குறித்த செய்தியை அடிக்கடி நாம் பார்த்துள்ளோம்...

விஜய்யை அடுத்து சூர்யா? கீர்த்திசுரேஷின் அதிரடி முடிவு

ஏ.எல்.விஜய் இயக்கிய 'இது என்ன மாயம்' என்ற படத்தில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ்....

நம்பவே முடியவில்லை. இது கனவா நனவா? 'கபாலி' ஸ்டண்ட் மாஸ்டர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியாகி பல உலக சாதனைகளை தகர்த்து வருகிறது...