close
Choose your channels

'தல 56' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று ஆரம்பம்?

Friday, September 11, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வீரம்' சிவா இயக்கி வரும் அஜீத்தின் 'தல 56' திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. அதன்பின்னர் படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல் காட்சிகளின் படப்பிடிப்பிற்காக விரைவில் அஜீத், ஸ்ருதிஹாசன் உள்பட படக்குழுவினர் அனைவரும் வெளிநாடு செல்லவுள்ளனர்.

இந்த படத்தின் பாடல்கள் கம்போஸ் பணிகளை இசையமைப்பாளர் அனிருத் முற்றிலும் முடித்துவிட்டதாகவும், பாடல்கள் அனைத்தையும் அஜீத் கேட்டு அனிருத்தை பாராட்டியதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக், இம்மாதம் 17ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி தினத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அஜீத் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், கபீர்சிங், ராகுல்தேவ், சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை ஏ.எம்.ரத்னம் அவர்கள் மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment