The Expendables படத்துடன் கனெக்ஷன் ஆனது 'தல 57'

  • IndiaGlitz, [Thursday,July 28 2016]

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் சில்வர்ஸ்டர் மற்றும் அர்னால்ட் நடித்த The Expendables' படம் உள்பட பல ஹாலிவுட் வெற்றி படங்களின் படப்பிடிப்பு நடைபெற்ற இடம் பல்கேரியாவில் உள்ள Nu Boyana Film Studios. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள மிகப்பெரிய ஸ்டுடியோ இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்டுடியோவில்தான் தல அஜித் நடிக்கவுள்ள 'தல 57' படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இந்த படம் ஹாலிவுட் ஸ்டைலில் மிகவும் பிரமாண்டமாக தயாரிக்கப்படவுள்ளதாக வந்த தகவலை இந்த செய்தி உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கி தொடர்ச்சியாக 40 நாட்கள் நடைபெறவுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டெக்னிக்கல் டீம் பல்கேரியா சென்றுவிட்ட நிலையில் ஆகஸ்ட் முதல் வாரம் அஜித், காஜல் அகர்வால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பல்கேரியா செல்லவுள்ளனர்.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத்தின் அதிரடி இசையில் உருவாகவுள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளார்.

More News

'Vijay 60' heroine confirms Puratchi Thalaivar title?

While the team ‘Vijay 60’ are gearing up to fly to Europe for shooting some important action scenes and a couple of duets featuring Vijay and Keerthi Suresh, there comes an exciting buzz about the title of the film...

தனுஷூக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கோலிவுட் திரையுலகில் 'துள்ளுவதோ இளமை' என்ற படத்தில் ஒரு மாணவனாக அறிமுகமான துடிப்புள்ள இளைஞரான தனுஷ்...

'கபாலி' பேச்சு குறித்த சர்ச்சை. வைரமுத்து விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படம் தோல்வி என்று பிரபல பாடலாசிரியரும், ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான வைரமுத்து நூல்...

மீண்டும் ஒரு காதல் கதை' சென்சார் தகவல்கள்

மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'தட்டத்தின் மறயாது' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான 'மீண்டும் ஒரு காதல் கதை'...

ஒரே படத்தில் தனுஷ்-சிம்பு. பிரபல இசையமைப்பாளரின் முயற்சி வெற்றி

கோலிவுட் திரையுலகில் இரு துருவங்களாக இருக்கும் தனுஷ், சிம்பு ஆகிய இருவரையும் ஒரே சமயத்தில் இயக்கும் பெருமையை இயக்குனர் கவுதம் மேனன் பெற்றார்...