close
Choose your channels

'அஜித் 56' உரிமையை பெற்றதா ஜாஸ் சினிமாஸ்?

Wednesday, December 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுகவின் முக்கிய புள்ளியாக கருதப்படும் சசிகலாவை சமீபத்தில் அஜித் சந்தித்ததாக செய்தி வெளிவந்து அந்த செய்தி அஜித் தரப்பில் இருந்து மறுக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமானதாக கூறப்படும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் அஜித்தின் அடுத்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அஜித் நடித்த முந்தைய படமான 'வேதாளம்' படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்று பிரமாண்டமாக வெளியிட்ட ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் அஜித்தின் 57வது படத்தின் உரிமையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முறையான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என தெரிகிறது. அஜித் 57' படம் மட்டுமின்றி அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள 'பாகுபலி 2' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெறவும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
பல்கேரியா உள்பட ஐரோப்பிய நாடுகளில் இந்த படத்தின் பெரும்பான்மையான காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. விரைவில் ஐதராபாத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அஜீத், காஜல் அகர்வால், அக்சரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'அஜித் 57' படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 'வீரம்', 'வேதாளம்' படங்களை அடுத்து சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment