close
Choose your channels

இன்று 'அஜித் 57' படத்தின் முக்கிய தினம்

Wednesday, July 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'தல' அஜித் நடித்த 'வேதாளம்' கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் கிட்டத்தட்ட 8 மாதங்கள் கழித்து அவருடைய அடுத்த படம் தொடங்கப்பட்டுள்ளது. ஆம் அஜித்தின் 57வது படத்திற்கு இன்று எளிய முறையில் சென்னையில் பூஜை நடைபெறுகிறது. இந்த தகவலை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
'வீரம்', வேதாளம்' படங்களை இயக்கிய சிவா மூன்றாவது முறையாக அஜித்தின் 57வது படத்தையும் இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். கபிலன் பாடல்கள் எழுதும் இந்த படத்திற்கு அந்தோணி ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.
அஜித் இந்த படத்தில் FBI அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அஜித் தற்போது வெளிநாட்டில் தனது குடும்பத்தினர்களுடன் ஓய்வு எடுத்து வருகிறார். அவர் திரும்பி வந்தவுடன் படப்பிடிப்பு தேதி முடிவு செய்யப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment