close
Choose your channels

ஆடிக்கு முந்துகிறது அஜித் படம்

Saturday, June 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிக்கவுள்ள 'அஜித் 57' படத்தின் படப்பிடிப்பு எப்போது என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை இரண்டாவது வாரத்திற்குள் தொடங்கிவிடும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.
ஜூலை 16ஆம் தேதி ஆடி மாதம் பிறக்கவிருக்கின்றது. ஆடி மாதம் எந்த படபூஜையும் நடைபெறாது. எனவே ஆடிக்கு முன்பே அஜித் படத்தின் பூஜை அல்லது படப்பிடிப்பை தொடங்கிவிட படக்குழு முடிவு செய்துள்ளது.
மேலும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளதால் இம்மாதத்திற்குள் படப்பிடிப்பு லொகேஷன்களை இயக்குனர் சிவா முடிவு செய்யவுள்ளார். அதற்கு முன்னர் இந்த படத்தின் வில்லன் மற்றும் நாயகி தேர்வையும் அவர் முடிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவும், வெற்றி ஒளிப்பதிவு செய்யவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது ஏற்கனவே அறிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment