close
Choose your channels

பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு தினங்களில் அஜித்தின் விருந்து

Monday, July 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிக்கவுள்ள 57வது படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் எளிய முறையில் நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் விரைவில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் பொங்கல் திருநாளிலும், படத்தின் ரிலீஸ் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்திலும் இருக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த இரு தினங்களில் அஜித் தனது ரசிகர்களுக்கு தரும் விருந்தாக ஃபர்ஸ்ட்லுக்கும் பட ரிலீசும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்துடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்து காஜல் அகர்வால் நடிக்கவுள்ள இந்த படத்தில் முக்கிய வேடத்தில் கருணாகரனும் நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 4 நாடுகளில் நடைபெறவுள்ளது. 'வீரம், வேதாளம் படங்களை அடுத்து மூன்றாவது முறையாக அஜித் நடிக்கும் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment