பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு தினங்களில் அஜித்தின் விருந்து

  • IndiaGlitz, [Monday,July 11 2016]

தல அஜித் நடிக்கவுள்ள 57வது படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் எளிய முறையில் நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் விரைவில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் பொங்கல் திருநாளிலும், படத்தின் ரிலீஸ் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்திலும் இருக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த இரு தினங்களில் அஜித் தனது ரசிகர்களுக்கு தரும் விருந்தாக ஃபர்ஸ்ட்லுக்கும் பட ரிலீசும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்துடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்து காஜல் அகர்வால் நடிக்கவுள்ள இந்த படத்தில் முக்கிய வேடத்தில் கருணாகரனும் நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 4 நாடுகளில் நடைபெறவுள்ளது. 'வீரம், வேதாளம் படங்களை அடுத்து மூன்றாவது முறையாக அஜித் நடிக்கும் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் 60' படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் கேரக்டர் குறித்த தகவல்

இளையதளபதி விஜய் நடிப்பில் 'அழகிய தமிழ் மகன்' பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் 'விஜய் 60' படத்தின் சென்னை மற்றும் ஐதராபாத்...

நடிகராக மாறும் பிரபல காமெடி நடிகரின் சகோதரர்

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' என்ற ஒரே படத்தின் வெற்றியால் பிரபலமான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்...

ஏ.ஜி.எஸ்-கே.வி.ஆனந்த் படத்தின் முக்கிய தகவல்

'அனேகன்', 'வை ராஜா வை' மற்றும் 'தனி ஒருவன்' என்ற மூன்று தொடர் வெற்றி படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட்...

சந்தானத்தின் 'தில்லுக்கு துட்டு'. 4 நாட்கள் வசூல் நிலவரம்

கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சந்தானம், 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', 'இனிமே இப்படித்தான்' ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார்....

தமிழக முதல்வருடன் சரத்குமார் - ராதிகா சந்திப்பு

முன்னாள் நடிகர் சங்க தலைவரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகா...