தல அஜித்தின் 57வது படம் குறித்த முக்கிய தகவல்கள்

  • IndiaGlitz, [Tuesday,March 15 2016]

'தல அஜித் நடித்த 'வேதாளம் திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி ரூ.100 கோடி கிளப்பில் இணைந்து சூப்பர் ஹிட் ஆகிய நிலையில், அஜித் அறுவை சிகிச்சை செய்து கொண்டு கடந்த சில மாதங்களாக ஓய்வு எடுத்து வருகிறார். தற்போது அவருடைய உடல்நிலை ஓரளவு சரியாகியுள்ள நிலையில் அவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.


அஜித்தின் 57வது படத்தின் இயக்குனர் 'சிறுத்தை' சிவா என்றும், இசையமைப்பாளர் அனிருத் என்றும், படத்தொகுப்பளர் பிரவீன் கே.எல், என்றும், ஒளிப்பதிவாளர் வெற்றி என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் ஏப்ரல் 16ஆம் தேதி வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த பரிசீலனை நடந்து வருவதாகவும், ஏப்ரல் 16க்குள் இந்த படத்தின் நாயகி யார் என்பது முடிவு செய்யப்பட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது.

More News

'கருடா''வுக்கு வில்லனாகும் 'ஆரம்பம்' நடிகர்

அரிமாநம்பி' ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை...

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ அட்டை வழங்கும் விழா

ஏ.சி.எஸ். மருத்துவமனையும் நடிகர் சங்கமும் இணைந்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ அடையாள அட்டை வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

''இது நம்ம ஆளு' பாடலில் தேசிய விருது பெற்ற கலைஞர் பங்கேற்பு

பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா நடித்த 'இது நம்ம ஆளு' படத்தில் இடம்பெற்ற 'மாமன் வெயிட்டிங் என்ற ஒரே ஒரு பாடல் மட்டுமே...

விஜய்-60 படக்குழுவினர்களின் முக்கிய பயணம்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படம் வரும் ஏப்ரல் 14, தமிழ்ப்புத்தாண்டில் வெளியாகும் என உறுதியாகியுள்ள...

நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார் அதிரடி நீக்கம். அதிர்ச்சி தகவல்

நடிகர் சங்கத்தில் பெருமளவு முறைகேடு நடந்ததாக முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, மற்றும் பொருளாளர் வாகை...