'தல 57': அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

  • IndiaGlitz, [Friday,July 15 2016]

'ஏகே 57' என்று கூறப்படும் தல அஜித்தின் 57வது படத்தின் பூஜை சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் ஆகஸ்ட் முதல்வாரம் தொடங்கப்படவுள்ளதாகவும், இதற்காக அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் இம்மாத இறுதியில் பல்கேரியா செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் ஆகியோர் கிட்டத்தட்ட தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக இயக்குனர் சிறுத்தை சிவா தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இன்னும் தெரியாத ஒரே விஷயம் இந்த படத்தின் வில்லன் யார்? என்பதுதான்.
இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல நடிகர்கள் விஜய்சேதுபதி, சசிகுமார் ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் நாயகன், வில்லன் ஆகிய இரண்டு கேரக்டர்களிலும் அஜித்தே நடிக்கவுள்ளதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
FBI அதிகாரி மற்றும் வில்லன் ஆகிய இரு வேடங்களிலும் அஜித் நடிப்பது உறுதியானால், அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து காத்திருக்கின்றது என்பது உறுதியாகின்றது.

More News

சென்னையில் 'கபாலி' பிரிமியர் காட்சி குறித்த முக்கிய தகவல்

வெளிநாடுகளில் ரிலீசுக்கு முந்தைய நாள் பிரிமியர் காட்சி திரையிடப்படுவதை போல சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி'...

விக்ரம்-நயன்தாரா பார்ட்டியில் 2000 பேர்

முதல்முறையாக விக்ரம்-நயன்தாரா ஜோடியாக இணைந்து நடிக்கும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது...

முதன்முதலில் 2வது நாயகன் வேடத்தில் சூரி

'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் இடம்பெற்ற புரோட்டா காட்சி மூலம் கோலிவுட் திரையுலகில் புகழ் பெற்ற சூரி, தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்...

செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸ் திட்டம்

கவுதம் மேனன், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் என மூன்று முன்னணி இயக்குனர்கள் ஒரே படத்தில் இணைந்த பெருமை 'நெஞ்சம் மறப்பதில்லை'...

சுசீந்திரன் -விஷ்ணு படத்தின் வித்தியாசமான டைட்டில்

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் தொடங்கியுள்ள நிலையில்...