'வேதாளம்' படத்தின் வியப்பான வியாபாரம்
- IndiaGlitz, [Saturday,September 26 2015]
ஒருபக்கம் இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் முன்பதிவு மற்றும் ரிலீஸுக்கு முந்தைய ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மற்றொரு பக்கம் 'தல அஜீத்தின் 'வேதாளம்' திரைப்படத்தின் வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
'வேதாளம்' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் நிறுவனமும், கேரள மாநில உரிமையை ஷெனாய் குருப்ஸ் நிறுவனமும், கர்நாடக மாநில உரிமையை ஸ்ரீகோகுல் பிலிம்ஸ் நிறுவனமும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கேரள மாநில உரிமையை பெற்றுள்ள ஷெனாய் குருப்ஸ் நிறுவனம்தான் அஜீத்தின் முந்தைய திரைப்படமான 'என்னை அறிந்தால்' படத்தின் கேரள ரிலீஸ் உரிமையையும் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் தொடர்ச்சியாக இரு அஜீத் படங்களை இந்த நிறுவனம் ரிலீஸ் செய்யும் பெருமையை பெற்றுள்ளது.
அதேபோல் கர்நாடக மாநில ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள ஸ்ரீகோகுல் பிலிம்ஸ் நிறுவனம் இதற்கு முன்னர் ஷங்கர் இயக்கிய 'ஐ' திரைப்படத்தை கர்நாடகத்தில் ரிலீஸ் செய்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் 'வேதாளம்' படத்தை மிகப்பெரிய தொகை கொடுத்து உரிமை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.