துப்பாக்கி சுடும் போட்டி: தங்கம், வெள்ளி பதக்கங்களை அள்ளிய அஜித்!

  • IndiaGlitz, [Saturday,July 30 2022]

திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பங்குகொண்ட அஜித் அணி தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை அள்ளியதாக தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களாக திருச்சியில் 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த போட்டியில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டார் என்பதும் அவர் கலந்து கொண்ட செய்தி அறிந்ததும் அந்த பகுதி மக்கள் அவரை பார்ப்பதற்கு மிகுந்த ஆர்வத்தில் காத்திருந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தன்னை காணவந்த ரசிகர்களுக்கு அவர் துப்பாக்கி போட்டி நடந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் ஏறி நின்று கையசைத்தார் என்பதும் இதுகுறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது அறிந்ததே.

இந்த நிலையில் திருச்சியில் நடைபெற்ற 47வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்குமார் கலந்து கொண்ட அணி நான்கு தங்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இன்னும் ஒருசில நாட்களில் அஜித் நடித்து வரும் ‘ஏகே 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு புனேவில் நடைபெறவுள்ள நிலையில் இந்த படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.